மாவட்ட செய்திகள் ஜனவரி 25,2023 | 00:00 IST
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கல்லுாரியில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் 126 வது பிறந்த நாள் விழா மற்றும் புகைப்படக் கண்காட்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் டாக்டர் அப்துல்காதிர் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் கணேசன் வரவேற்றார். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் பற்றி மாணவர் அருண் பேசினார். சிறப்பு அழைப்பாளராக நேதாஜி 126 வது பிறந்த நாள் விழா கமிட்டி உறுப்பினர்கள் வால்டைர், சுகுபாலா மற்றும் கலசலிங்கம் கல்லூரி பேராசிரியர் ரகுரதி பாண்டியன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கணேசன், குருநாதன், செந்தில்குமார், குருநாதன் தலைமையில் மாணவர்கள் செய்தனர்.
வாசகர் கருத்து