மாவட்ட செய்திகள் ஜனவரி 25,2023 | 00:00 IST
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 வகுப்பு படித்து வருகிறார் சுபாஷனி. இவரது தந்தை சுரேஷ் கட்டிட தொழிலாளி . சிறுவயதில் முதல் சுகாசினி குத்து சண்டை மீது தீராத விருப்பம். உடற்கல்வி ஆசிரியர் சத்யராஜ் பல்வேறு குத்து சண்டை போட்டிகளில் கலந்து கொள்ள வைத்தார். மாநில குத்து சண்டை போட்டியில் முதல் பரிசை பெற்றார். தொடர்ந்து பல பரிசுகளை பெற்று முதல்வர் ஸ்டாலினிடம் பரிசு பெற்றார். தற்போது பல போட்டிகளில் கலந்து கொள்ள சுபாஷினி ஆர்வமாக உள்ளார். வெளிநாடு போட்டிகளில் கலந்து கொண்டு தனது பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்ப்பதே லட்சியம் என கூறி வருகிறார். இவர் போட்டிகளில் கலந்து கொள்ள அரசு உதவுமா ?
வாசகர் கருத்து