மாவட்ட செய்திகள் ஜனவரி 25,2023 | 19:47 IST
கரூர் அரசு கலை கல்லூரி வேதியியல் துறையில் 400 பேர் படிக்கின்றனர். 20 ஆசிரியர்கள் தேவை. ஆனால் 6 பேர் தான் உள்ளனர். போதுமான ஆசிரியர்கள் நியமிக்க கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசுக்கு உடனே பரிந்துரை செய்வதாக முதல்வர் கௌசல்யா தேவி உறுதி அளித்தார். அதை ஏற்று மாணவர்கள் கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து