பொது ஜனவரி 26,2023 | 20:03 IST
சுப்ரீம்கோர்ட் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிட திட்டமிட்டு வருவதாக தலைமை நீதிபதி சந்திரசூட் அண்மையில் கூறி இருந்தார். தீர்ப்புகளை மொழிபெயர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. குடியரசுத் தினத்தை முன்னிட்டு 1000-க்கும் மேற்பட்ட தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியாகியுள்ளது. 52 வழக்கின் தீர்ப்புகள் தமிழிலும், 29 தீர்ப்புகள் மலையாளத்திலும், 28 தெலுங்கிலும், 21 ஒடியா மொழியிலும் வந்துள்ளது.
வாசகர் கருத்து