சினிமா வீடியோ ஜனவரி 27,2023 | 00:01 IST
ஆர்ஆர்ஆர் படத்தின் வரவேற்பால் ஹாலிவுட் வரை பேசப்படும் இயக்குனராகி உள்ளார் ராஜமவுலி. சமீபத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் சாங் என்கிற பிரிவில் மிக உயரிய விருதான கோல்டன் குளோப் விருதை வென்றது. தற்போது விரைவில் அறிவிக்கப்பட உள்ள ஆஸ்கர் விருதுக்காக சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. இந்த நிலையில் சர்ச்சையான கருத்துக்களை எப்போதும் கூறி வரும் இயக்குனர் ராம்கோபால் வர்மா, ராஜமவுலியை குடிபோதையில் எச்சரித்துள்ளார். சமீபத்தில் ராஜமவுலியும் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனும் சந்தித்தனர். இந்த வீடியோவை பகிர்ந்து, “ராஜமவுலி சார்.. தயவுசெய்து உங்களது பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ளுங்கள்.. ஏனென்றால் இந்தியாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட அளவிலான இயக்குனர்கள் உங்கள் மீதான பொறாமையால் உங்களைக் கொல்வதற்காக ஒரு புதிய ஸ்குவாடு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள், அதில் நானும் ஒருவனாக இருக்கிறேன்.. தற்போது குடித்திருப்பதால் இந்த ரகசியத்தை நான் வெளிப்படுத்தி விட்டேன்” என்று கூறியுள்ளார் ராம் கோபால் வர்மா.
வாசகர் கருத்து