மாவட்ட செய்திகள் ஜனவரி 27,2023 | 00:00 IST
கும்மிடிப்பூண்டி அருகே நேமலூர் ஊராட்சியில், குப்பைகளை மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலை உள்ளது. நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குப்பை மேடுகள் எரிந்தன. தீ அணைக்கும் வீரர்கள் 6 வண்டிகளில் வந்து, 10 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அருகில், வன பகுதி இருப்பதால், அங்கும் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மின் துறையினர், பக்கத்தில் உள்ள தொழில் கூடங்களுக்கு மின் விநியோகத்தை நிறுத்தினர். விபத்து குறித்து விசாரணை நடக்கிறது.
வாசகர் கருத்து