மாவட்ட செய்திகள் ஜனவரி 27,2023 | 19:19 IST
இளையான்குடி அருகே ராதாப்புலி கிராமத்தில் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக பூஜை கடந்த 25 ம் தேதி யாகசாலை வேள்வியுடன் துவங்கியது. மூன்றாம் கால பூஜை, கோ பூஜை, நாடி சந்தனம் நடைபெற்று சிவாச்சாரியார்கள் புனித நீரை கோபுர விமானங்கள் மீது ஊற்றி கும்பாபிேஷகம் கோலாகலமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செல்ல விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராதாப் புலிகிராமத்தைச் சேர்ந்த துரைராஜ், வள்ளியம்மாள் குடும்பத்தினர் செய்தனர்.
வாசகர் கருத்து