சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 28,2023 | 15:28 IST
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சமுத்திரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 270 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அக்டோபர் 9 ம் தேதி உலக தபால் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகளை தலைமை ஆசிரியர் ராஜசேகர் மற்றும் ஆசிரியர்கள் தபால் எழுத வைத்தனர். இதற்காக பள்ளி சார்பில் மாணவர்களுக்கு ஒரு 'இன்லான்ட் லெட்டர்' கொடுக்கப்பட்டது. கடிதத்தில் மாணவர்கள் தங்கள் பெற்றோர், நண்பர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் பிடித்த விஷயங்கள், பிடிக்காத விஷயங்களை எழுத அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி எழுதப்பட்ட கடிதங்கள், மாணவர்களின் வீட்டு முகவரிக்கு அவர்கள் மூலமே அனுப்பப்பட்டது.
வாசகர் கருத்து