மாவட்ட செய்திகள் ஜனவரி 28,2023 | 16:39 IST
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சி நிறுவனம் தற்போது 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிடி மண்ணை கூட தர மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இந்த நிலையில் கரிவெட்டி,கத்தாழை,வளையமாதேவி,வடக்கு வெள்ளூர்,அம்மேரி,ஆதான்டார்கொள்ளை, உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களின் மக்கள் ஒன்றிணைந்து என்எல்சி மற்றும் மாவட்ட நிர்வாகமே மக்களை ஏமாற்றாதே எனவும் வேளாண்துறை அமைச்சரை கண்டித்தும் கிராமங்கள் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் இப்பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது
வாசகர் கருத்து