மாவட்ட செய்திகள் ஜனவரி 28,2023 | 00:00 IST
புதுச்சேரியில் ஜி20 மாநாடு 30ம் தேதி நடக்கிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வல்லவன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கலெக்டர், புதுச்சேரியில் 30, 31ந் தேதிகளில் ஜி20 கூட்டம் நடக்கிறது. இதில் பல நாட்டு பிரநிதிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டால் சுற்றுலா பயணிகளுக்கு தடை என தவறான வதந்தி பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையம், அக்கார்டு, ரெசிடன்சி, ரேடிசன் ஓட்டல்கள், சுகன்யா கன்வென்சன் சென்டர் ஆகிய 5 இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும். இந்த பகுதிகளில் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 1ந் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவித்தார்.
வாசகர் கருத்து