மாவட்ட செய்திகள் ஜனவரி 28,2023 | 18:26 IST
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் மற்றும் மூளை, நரம்பியல் நிபுணர் டாக்டர். நாகராஜன் உடல் நலக்குறைவால் சில நாட்களுக்கு முன் காலமானார். அவருக்கு மதுரை I.M.A. (Indian Medical Association) அரங்கில் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனை டீன் டாக்டர் ரத்தினவேல் தலைமை வகித்தார். டாக்டர் நாகராஜனின் மருமகன் மற்றும் கூட்டுறவுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலர் டாக்டர். ராதாகிருஷ்ணன், கலெக்டர் அனீஷ்சேகர், விருதுநகர் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் சங்குமணி, டாக்டர்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.
வாசகர் கருத்து