பொது ஜனவரி 29,2023 | 07:28 IST
ரயில் பயணிகளுக்கு உணவு தயாரிப்பு மற்றும் விநியோக பணியை, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி மேற்கொள்கிறது. விரைவு ரயில்களில் இட்லி, சாதம் வகை உள்ளிட்ட 70 உணவு பொருட்களின் விலை, 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அசைவ உணவு வகைகளின் விலை 10 சதவீதத்திற்கும் மேல் உயர்த்தப்பட்டு உள்ளது. இனிப்பு வகையில் ஜிலேபி, குலோப் ஜாமூன், கேசரி ஆகியவை 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு, 26ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
வாசகர் கருத்து