பொது ஜனவரி 29,2023 | 10:34 IST
தமிழகத்தில் மாநில அரசு மற்றும் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 7,898 சமுதாய கழிப்பறைகள், 2,771 பொது கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றின் பராமரிப்பு தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்க, ஒவ்வொரு கழிவறையிலும் 'கியூ.ஆர்., கோடு' அட்டை ஒட்டப்படுகிறது. இதுவரை 7,954 கழிப்பறைகளில் பொருத்தப்பட்ட 'கியூ.ஆர். கோடு' மூலம் 1.25 லட்சம் பேர், கருத்து மற்றும் புகார்களை பதிவு செய்துள்ளனர். அதன்மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கழிவறை பராமரிப்பை மேம்படுத்த இத்திட்டம் உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து