அரசியல் ஜனவரி 30,2023 | 12:29 IST
மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். தமிழகத்தில் உத்திரமேரூர் கிராமத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோயிலில் ஆயிரம் ஆண்டு பழமையான கல்வெட்டு உள்ளது. அது ஒட்டுமொத்த உலகத்தையும் ஆச்சர்யப்படுத்துவதாக குறிப்பிட்டார். குடவோலை தேர்தல், கிராம சபை கூட்டங்கள் பற்றி கல்வெட்டில் இருப்பதாக தெரிவித்த பிரதமர், இந்த கல்வெட்டுகள் நமது நாட்டின் மினி அரசியல் சாசனமாக திகழ்வதாக கூறினார். பிரதமர் மோடியின் பேச்சு காரணமாக வைகுண்ட பெருமாள் கோயிலில் கல்வெட்டுகளை பார்க்க சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் உத்திரமேரூருக்கு வருகின்றனர்.
வாசகர் கருத்து