அரசியல் ஜனவரி 31,2023 | 09:08 IST
சேலம் திருமலைகிரி மாரியம்மன் கோயிலுக்கு சென்ற தலித் இளைஞரை திமுக செயலாளர் மாணிக்கம் கெட்ட வார்த்தைகளால் கேவலமாக திட்டி மிரட்டினார். இளைஞரையும் அவர் தந்தையையும் மாணிக்கம் மிரட்டுவதை கூட்டத்தில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்தார். சமூக வலைதளங்களில் வெளியானது. மாணிக்கத்தை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக பொது செயலாளர் துரை முருகன் அறிவித்தார். சம்பவம் குறித்து இரும்பாலை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. டெல்லியில் உள்ள எஸ்சி எஸ்டி ஆணையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணிக்கத்தின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து