மாவட்ட செய்திகள் ஜனவரி 31,2023 | 14:55 IST
மயிலாடுதுறை மாவட்டம், கஞ்சாநகரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சத்தியசீலன். இவர் அதே பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் என்பவர் இடத்தில் ஸ்ரீராம் பெஸ்ட் பென்சிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இங்கு ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக விமயிலாடுதுறை விஏஓ மணிகண்டன் அளித்த புகார் அளித்தார். தரங்கம்பாடி வருவாய்த் துறையினர் சோதனை நடத்தி,மறைத்து வைத்திருந்த 310 மூட்டைரேஷன் அரிசிகளை பறிமுதல் செய்தனர். தலைமறைவாகியுள்ள சத்தியசீலனை போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து