மாவட்ட செய்திகள் ஜனவரி 31,2023 | 15:07 IST
சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை, கண்டனுார், காரைக்குடி அரண்மனை பொங்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான நகரத்தார்கள் வைரவேல், 219 சர்க்கரை காவடிகளுடன் கடந்த 29 ம் தேதி குன்றக்குடியில் இருந்து பாதயாத்திரையாக பழநி புறப்பட்டனர். திண்டுக்கல் நத்தம் வாணியர் பஜனை மடத்திற்கு வந்தனர். அங்கு சிறப்பு பூஜை, பஜனை செய்து முருகப் பெருமானை வழிபட்டனர். மொத்தம் 19 நாட்கள் பாதயாத்திரை சென்று தைப்பூச நாளான பிப்ரவரி 4 ல் பழநி முருகனை தரிசனம் செய்கின்றனர். பிப்ரவரி 6 ல் மகம் நட்சத்திரத்தன்று மலைக்கோயிலில் காவடி நேர்த்திக்கடன் செலுத்திய பின் நடந்தே ஊர் திரும்புவதை 400 ஆண்டுகளாக பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றனர்.
வாசகர் கருத்து