மாவட்ட செய்திகள் ஜனவரி 31,2023 | 16:35 IST
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் கோவிந்தனூரில் சுமார் 100 தலித் குடும்பங்கள் உள்ளனர். இறந்தவர் உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. கோவிந்தனூர் ராமசாமி என்பவர் இறந்தார். சேறும், சகதியுமான ஆற்றைக் கடந்து சடலத்தை தூக்கி சென்று அடக்கம் செய்தனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் இறந்தவர் உடலை ஆற்றில் இறங்கி தூக்கி சென்று தான் அடக்கம் செய்யும் நிலை உள்ளது. பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆற்றை கடக்க தரைப்பாலம் அமைத்து தர கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
வாசகர் கருத்து