மாவட்ட செய்திகள் ஜனவரி 31,2023 | 16:52 IST
ஐ.நா சபை 2023 ஆம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்து சிறப்பு செய்திருக்கிறது. இதனையயடுத்து மன்னார்குடி தூய வளனார் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகள் நவதானிய பொங்கல் விழா நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர், மன்னார்குடி டிஎஸ்பி அஸ்வத் ஆண்டோ சிறு தானிய முன்னெடுப்பாளர்களுக்கு விருது வழங்கினார். தொடர்ந்து பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவ மாணவியர்கள் சிறுதானியங்களான மாப்பிள்ளை சம்பா , கம்பு , கேழ்வரகு , குதிரைவாலி , மூங்கில் அரிசி , கருப்பு கவுனி உள்ளிட்ட ஏராளமான சிறுதானியத்தின் நன்மைகளை விளக்கினர்.
வாசகர் கருத்து