மாவட்ட செய்திகள் ஜனவரி 31,2023 | 00:00 IST
விருதுநகர் மாவட்டம் சேது நாராயணபுரத்தை சேர்ந்தவர் ராதா. பல்லடம் ஸ்டேஷனில் ட்ராபிக் போலீஸாக பணியாற்றினார். பல்லடம் நான்கு முனை சந்திப்பில் டூவீலரில் ரோட்டை கடக்க முயன்ற போது டாட்டா ஏஸ் வேன் ராதாவின் டூவீலரில் மோதியது. தலையில் பலத்த காயமடைந்த ராதா கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். டிரைவரை கைது செய்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து