மாவட்ட செய்திகள் ஜனவரி 31,2023 | 17:50 IST
கோவை ரயில்நிலையம் 150வது ஆண்டை கொண்டாடும் நேரத்தில் ரயில் பயனர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. பல நூறு கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தரும் முதலாம் தர ரயில்நிலையங்கள் வரிசையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பிட் லயன்களை போத்தனூர் மற்றும் கவுண்டம்பாளையத்திற்கு மாற்றி ரயில்நிலையத்தை விரிவாக்கம் செய்யவும், அதிவேக வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில் பாதைகளின் தரத்தை உயர்த்தவும் பெட்டிகளின் தரத்தை உயர்த்தவும், தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பழைய ரயில்களை மீண்டும் இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த 150 வது ஆண்டை கொண்டாடும் சமயத்தில் ரயில்வே நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
வாசகர் கருத்து