மாவட்ட செய்திகள் பிப்ரவரி 01,2023 | 00:00 IST
ஓடக்காடு, காலேஜ் ரோட்டை சேர்ந்த வெங்கட், இரவு தனது டூவிலரை வீட்டு முன் நிறுத்தினார். காலையில் பார்த்த போது காணவில்லை. சிசிடிவி காட்சிகளை பார்த்த போது அதிகாலை 3 மணிக்கு 2 வாலிபர்கள் வெங்கட்டின் டூவிலரையும், இன்னொருவரின் டூவீலரையும் சைடு லாக்கினை உடைத்து எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. வடக்குப் போலீசார் விசாரிக்கின்றனர். ஒரே இடத்தில் 2 டூவீலர் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து