மாவட்ட செய்திகள் பிப்ரவரி 01,2023 | 12:08 IST
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணையின் மொத்த நீளம் 4500 மீட்டர் உயரம் 32 அடி கொள்ளளவு ஆகும். புதுச்சேரி தமிழக விவசாயிகள் பயன்பாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் . இந்த ஆண்டுக்கான தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. விழுப்புரம் கலெக்டர் அணையில் இருந்து 40 கன அடி நீரை திறந்து வைத்தார். இதனால் தமிழக மற்றும் புதுச்சேரி பகுதியை சேர்ந்த 3200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். நிகழ்ச்சியில் தமிழக புதுச்சேரி அரசு அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்
வாசகர் கருத்து