சிறப்பு தொகுப்புகள் பிப்ரவரி 01,2023 | 12:08 IST
2023-24ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் தாக்கல் செய்தார். சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இது இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற பட்ஜெட். இந்திய பொருளாதாரம் அபார முன்னேற்றம் அடைந்துள்ளது. நாட்டின் வளர்ச்சியை உலகமே பாராட்டுகிறது. இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.உலகளாவிய சவால்கள் இருக்கும் இந்த சமயத்தில், ஜி20 தலைமையை இந்தியா ஏற்றுள்ளது. இது, உலக பொருளாதாரத்தில் இந்தியாவை மேலும் வலுப்படுத்தும் ஒரு தனித்துவமான வாய்ப்பு என்றும் நிரமலா பேசினார்.
வாசகர் கருத்து