மாவட்ட செய்திகள் பிப்ரவரி 01,2023 | 12:15 IST
ராயபுரம் தனியார் மண்டபத்தில் நேற்று இரவு மேரேஜ் ரிசப்ஷன் நடந்தது. கேமராமேன் நந்தகுமார் படம் எடுத்தார். செல்போன் அழைப்பு வர, கேமராவை ஒரு நாற்காலியில் வைத்துவிட்டு பேசினார். பேசி முடித்ததும் கேமராவை பார்த்தார். எங்கு தேடியும் காணவில்லை. சி.சி.டி.வி.காட்சிகளை பார்த்தபோது, 2 பேர் கேமராவை எடுத்து செல்வது தெரிந்தது.கேமராவின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய். நந்தகுமார் ராயபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து