மாவட்ட செய்திகள் பிப்ரவரி 01,2023 | 13:14 IST
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சி 24 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கில் கொட்டப்படுகிறது. சில மாதங்களாக உர கிடங்கிற்கு கொண்டு வரும் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை மட்டுமே உரக்கிடங்கிற்கு கொண்டுவரவேண்டும் என தூய்மை பணியாளர்களுக்கு நகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் குப்பைகளை தரம் பிரித்து உரக்கிடங்கிற்கு கொண்டு செல்ல ஏற்படும் தாமதத்தால் நகரில் ஆங்காங்கே குப்பைகள் தேக்கமடையும் நிலை உருவாகிறது. இதனால் தூய்மை பணியாளர்களில் ஒரு பிரிவினர் 50-க்கும் மேற்பட்டோர் இன்று நகராட்சி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர் கருத்து