மாவட்ட செய்திகள் பிப்ரவரி 01,2023 | 13:56 IST
பல்லடம் அருகே கேத்தனூர் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், அருள்மிகு வரம் தரும் மாரியம்மன் திருக்கோயில்களின் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. விநாயகர் வழிபாடு, நவகிரக ஹோமத்தோடு யாகங்கள் நடத்தப்பட்டு, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. மூலவர் சிலைகளுக்கும், கோபுர கலசத்திற்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து