மாவட்ட செய்திகள் பிப்ரவரி 01,2023 | 00:00 IST
துவரங்குறிச்சியை அடுத்த தெத்தூர் மலையாண்டி கோவில்பட்டியை சேர்ந்தவர் சிவஞானம், வயது 46. விவசாயியான இவர் புதுக்கோட்டை கோர்ட்டில் வழக்கு ஒன்றில் சாட்சி சொல்ல டூவீலரில் சென்றார். மருதம்பட்டி ரோட்டின் குறுக்கே 7 காட்டெருமைகள் நின்றிருந்தன. டூவீலரை அங்கேயே போட்டு விட்டு சிவஞானம் எஸ்கேப் ஆக முயற்சித்தார். அப்போது கூட்டத்தில் இருந்த காட்டெருமை ஒன்று துரத்தி வந்து சிவஞானம் மார்பில் முட்டி கீழே தள்ளியது. இதில் படுகாயமடைந்தவரை துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். துவரங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர். காட்டெருமை தாக்கி விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
வாசகர் கருத்து