மாவட்ட செய்திகள் பிப்ரவரி 01,2023 | 16:12 IST
மகாராஷ்டிராவின் மும்பை உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த சுமார் 40 ஆயிரம் சுமை தூக்கும் தொழிலாளர்கள், இன்று வேலை நிறுத்தம் செய்தனர். இதனால், மும்பையில் உள்ள மார்க்கெட்டுகள் அனைத்தும் வெறிச்சோடின. சுமைதூக்கும் தொழிலாளர் நல வாரியங்களை செயல்பட செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. அன்றாட தேவைக்கான பொருள்களை பெறுவதில் மக்கள் சிரமப்பட்டனர். ஒரு நாள் வேலை நிறுத்தமானது, இரண்டு நாட்களுக்கு மார்க்கெட்டுகளை பாதிக்கும் என்று சுமை தூக்கும் தொழிலாளர்களின் தலைவர் நரேந்திர பாட்டீல் கூறினார்.
வாசகர் கருத்து