மாவட்ட செய்திகள் பிப்ரவரி 01,2023 | 16:30 IST
2006 இல் கொண்டு வந்த உணவு பாதுகாப்பு தர சட்டத்தின்படி குட்கா புகையிலை பொருள்களுக்கு 2018-இல் உணவு பாதுகாப்பு ஆணையர் தடை விதித்தார். தடையை மீறியதாக சேலத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அந்த நோட்டீசை தனி நீதிபதி ரத்து செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து உணவு பாதுகாப்பு துறை சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2006 சட்டத்தின்படி புகையிலைப் பொருட்கள் உணவுப் பொருட்களாக குறிப்பிடப்படவில்லை. புகையிலை பொருட்கள் மத்திய அரசின் சட்ட வரையறைக்குள் உள்ளது ஆகையால் மாநில அரசால் நிரந்தரமாக தடை விதிக்க முடியாது. உணவு பாதுகாப்பு ஆணையருக்கு அந்த அதிகாரம் இல்லை என சென்னை ஹைகோர்ட் கூறியுள்ளது.
வாசகர் கருத்து