மாவட்ட செய்திகள் பிப்ரவரி 01,2023 | 17:38 IST
நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சி கூட்டம் தலைவர் பங்கஜம் தலைமையில் நடந்தது. வார்டு வளர்ச்சி மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவதில் பேரூராட்சி தலைவர் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைக் கண்டித்து திமுக கவுன்சிலர்கள் திலீப், பிரமிளா, அதிமுக கவுன்சிலர்கள் சஜி, ராஜலட்சுமி பேரூராட்சி அலுவலகம் முன்பு தனித்தனியாக அமர்ந்து 8 மணி நேரத்திற்கும் மேல் தர்ணாவில் ஈடுபட்டனர். ஆர்டிஓ பூஷண் குமார் பேச்சு வார்த்தை நடத்தினார். விடுபட்ட வார்டுகளுக்கு முன்னுரிமை வழங்குவதாக உறுதியளித்ததால் கலைந்து சென்றனர். திமுகவை சேர்ந்த பேரூராட்சி தலைவரின் ஒருதலைபட்ச செயலை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தியது ஜெகதளா பேரூராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாசகர் கருத்து