மாவட்ட செய்திகள் பிப்ரவரி 01,2023 | 00:00 IST
திருச்செங்கோடு அரசு பெண்கள் பள்ளியில் கழிவறைகள் பல நாட்களாக சுத்தம் செய்யப்படாததால், நோய் தொற்று ஏற்படுவதாக மாணவிகளிடமிருந்து புகார் வந்தது. நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, பள்ளியில் உள்ள கழிவறைகளை திடீர் ஆய்வு செய்தார். தினமும் இருமுறை சுத்தம் செய்து கிருமி நாசினிகள் தெளிக்க துப்புரவு பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். தேவைப்படும் வசதிகள் குறித்து மனு கொடுக்குமாறு பள்ளி ஆசிரியைகளை கேட்டுக்கொண்டார்.
வாசகர் கருத்து