மாவட்ட செய்திகள் பிப்ரவரி 02,2023 | 10:48 IST
கிருஷ்ணகிரி மாவட்டம், எக்கூர் கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் 21 ஆடுகளை வளர்த்து வருகிறார். இன்று காலை, கொட்டிலைப் போய்ப் பார்த்தார். 13 ஆடுகள் கடிபட்டு, ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தன. போலீசார் விசாரணை நடத்தி, கால் நடை ஆஸ்பத்திரிக்கு, இறந்த ஆடுகளை அனுப்பிவைத்தனர். உடல் கூறு ஆய்வறிக்கையில், என்ன விலங்கு கடித்திருக்கும் என்பது தெரியவரும் என போலீசார் கூறினர்.
வாசகர் கருத்து