மாவட்ட செய்திகள் பிப்ரவரி 02,2023 | 00:00 IST
குரோம்பேட்டை போஸ்டல் நகரை சேர்ந்த தேன்மொழி என்பவரின் கார் கடந்த 25-ம் தேதி காணாமல் போனது. சி.சி.டி.வி. பதிவுகளை பார்த்து போலீசார் விசாரித்தனர். தேன்மொழியின் தம்பி ஆதி நாராயணன் காரை திருடியது தெரிந்தது. அவருடைய நண்பர் அரவிந்தன் உதவி செய்துள்ளார். அப்பா கணேசன், அனைத்து சொத்துகளையும் அக்கா பெயரில் எழுதிவைத்ததால், ஆத்திரத்தில் காரை கடத்தியதாக ஆதி நாராயணன் கூறினார். இருவரும் கைதுசெய்யப்பட்டு சிறைக்கு அனுப்பபட்டனர்.
வாசகர் கருத்து