மாவட்ட செய்திகள் பிப்ரவரி 02,2023 | 00:00 IST
மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். நகைக்கடை உரிமையாளர். இந்து மக்கள் கட்சி தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக இருந்தார். மணிகண்டன் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் ஏட்டு ஹரிஹர பாபு தனது மனைவிக்கும், மணிகண்டனுக்கும் கள்ள உறவு இருப்பதாக சந்தேகித்தார். இதையடுத்து கூலிப்படையை ஏவி மணிகண்டனை ஏட்டு கொலை செய்தது தெரியவந்தது. ஹரிஹரபாபு, திருச்செந்தூரை சேர்ந்த ஹைதர் அலி உட்பட 7 பேரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து