பொது பிப்ரவரி 02,2023 | 13:26 IST
பெரம்பலூரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். கடந்த ஆண்டு, துபாயில் வேலை வாங்கி தருவதாக ஆன்லைனில் வந்த விளம்பரத்தை பார்த்து தொடர்பு கொண்டார். மர்ம ஆசாமிகள் ஆன்லைனிலேயே ஆறரை லட்ச ரூபாயை பெற்று கொண்டு ஏமாற்றினர். ரஞ்சித்குமார் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். பீகாரை சேர்ந்த விகாஸ் குமார் மிஸ்ரா, கவுதம் குமார் ஜா மோசடி செய்தது தெரிந்தது. டில்லியில் பதுங்கி இருந்த இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய், 1 சிபியு, 5 செல்போன், 5 செக் புக், 14 ஏடிஎம் கார்டை கைப்பற்றினர். இருவரையும் பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து