மாவட்ட செய்திகள் பிப்ரவரி 02,2023 | 13:32 IST
திருச்சி மேலரண்சாலையில் 500 ஆண்டு பழமையான ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசிவசுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. கோயில் திருப்பணிகள் முடித்து கும்பாபிஷேகம் செய்ய உள்ளனர். இதற்கான பாலஸ்தாபன வைபவம் கணபதி பூஜையுடன் துவங்கியது. யாக சாலையில் இருந்து கடங்கள் ஊர்வலமாக எடுத்து வந்து பாலஸ்தாபன தேவதைகள், விமான சித்திரங்களுக்கு சம்புரொஷணம் செய்து தீபாராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து