அரசியல் பிப்ரவரி 02,2023 | 15:11 IST
2019ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. கோவையில், சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுகவின் சவுந்திரவடிவு, திமுகவின் சுதாவை விட 3 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி நடந்திருப்பதாக சுதா புகார் கூறினார் . தேர்தல் முடிவை எதிர்த்து, கோவை முதன்மை மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த கோர்ட் உத்தரவிட்டது. ஜனவரி 24ல் ஓட்டுகள் மீண்டும் எண்ணப்பட்டு, முடிவுகள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. நீதிபதி ராஜசேகர் முடிவுகளை அறிவித்தார். மொத்தம் 5,357 ஓட்டுகள் பதிவாகின. சவுந்திரவடிவு 2,553 ஓட்டுகள் பெற்றார். சுதாவுக்கு 2,551, மற்றொரு வேட்பாளர் மல்லிகாவுக்கு 65 ஓட்டுகள் கிடைத்தன. 188 ஓட்டுகள் செல்லாதவை. சுதாவை விட இரண்டு ஓட்டுகள் அதிகம் பெற்று சவுந்திரவடிவு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வாசகர் கருத்து