மாவட்ட செய்திகள் பிப்ரவரி 02,2023 | 17:00 IST
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ளது ராயர்பாளையம். இந்த ஊரை சேர்ந்த நாகராஜ், நேற்று தன்வீட்டு முன் ஆர் 15 என்ற பைக்கை நிறுத்திவிட்டு தூங்க போனார். இன்று காலை அவர் வண்டியை காணவில்லை. போலீசில் புகார் கொடுத்தார். சி.சி.டி.வி. காட்சிகளைப் பார்த்தபோது, 2 பேர் வண்டியை திருடி, திருப்பூர் நோக்கி செல்வது தெரிந்தது. இதே போல, மங்கலம் சாலையில் ஒரு டூ வீலரை மூன்று மாணவர்கள் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகளையும் பார்த்தனர். ராயர்பாளையம் பகுதியில் வீடுகளை நோட்டமிடும் மற்றும் ஒரு சி.சி.டி.வி. காட்சிகளும் போலீசாரிடம் கிடைத்தன. தொடர் டூ வீலர் திருட்டுகளால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர் கருத்து