மாவட்ட செய்திகள் பிப்ரவரி 02,2023 | 17:54 IST
திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் கிணற்றுப் பாசனத்தில் ஆண்டு முழுவதும் கத்தரி சாகுபடி நடக்கிறது. அதிகப் பனிப்பொழிவு காரணமாக கத்திரியில் அழுகல் நோய் மற்றும் புழுக்கள் துளையிடுவது அதிகரித்து வருகிறது. வேளாண் துறை பரிந்துரைப்படி மருந்து தெளித்தும் நோயை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நோய் தாக்கிய கத்திரியை டன் கணக்கில் கீழே கொட்டும் அவலம் நீடிக்கிறது. விவசாயிகள் நலன் கருதி இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து