மாவட்ட செய்திகள் பிப்ரவரி 02,2023 | 19:04 IST
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த முருங்கப்பட்டியில் கொங்கு மாரியம்மன் கோயில் உள்ளது. கோயிலின் மெயின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் உண்டியலை உடைத்து பணம் மற்றும் ஆறரை கிலோ எடையுள்ள வெள்ளிக்கவசம் மற்றும் நான்கு கிராம் தங்கத் தாலி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து தப்பினர். இவற்றின் மதிப்பு 5 லட்சம் ரூபாய் என பூசாரி ராஜேந்திரன் தெரிவித்தார். உப்பிலியபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். அங்குள்ள சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதே ஊரில் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மாரியம்மன் கோயிலில் கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி தப்பியது குறிப்பிடத்தக்கது. கோயில்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வாசகர் கருத்து