மாவட்ட செய்திகள் பிப்ரவரி 03,2023 | 13:53 IST
பொள்ளாச்சி அருகே கூள நாயக்கன்பட்டி கிராமத்தில் 250 ஆண்டு பழமையான சின்ன முத்தையாசாமி, பொம்மையை சுவாமி, ஜக்காளம்மன் கோயில்கள் உள்ளது. இந்த மூன்று கோயில்களையும் கம்பளத்து நாயக்கர் சமுதாயத்தினர் பராமரித்து வருகின்றனர் கோயிலுக்கு சொந்தமான 48 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். கோயில் நிலத்தை குத்தகைக்கு விடுவதாக இந்து அறநிலைத்துறை அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்பளத்து நாயக்கர்கள் ஊர்வலமாக வந்து கலெக்டர் ஆபீஸ் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் பிரியங்காவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
வாசகர் கருத்து