மாவட்ட செய்திகள் பிப்ரவரி 03,2023 | 00:00 IST
ராணிப்பேட்டை மாவட்டம் ஒழுகூர் கிராமம் வடமேட்டு தெருவை சேர்ந்தவர் சேர்ந்தவர் ஏழுமலை(48). கட்டிட மேஸ்திரி இவரது மனைவி கலைச்செல்வி(38), ஷூ தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். ஏழுமலைக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் சண்டை போடுவது வழக்கம். நேற்று நள்ளிரவில் ஏழுமலை அதிகம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். தன்னை தாக்க வந்த கணவரை அருகில் இருந்த கத்தியால் கலைச்செல்வி வெட்டியுள்ளார் இதில் ஏழுமலை அதே இடத்தில் இறந்தார்.. போலீசார் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
வாசகர் கருத்து