மாவட்ட செய்திகள் பிப்ரவரி 03,2023 | 15:33 IST
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சீனியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ், வயது 58. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக வேலை பார்த்தார். நல்லாசிரியர் விருது பெற்றவர். குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை படிக்க வைப்பது, தேசிய அளவிலான கலை நிகழ்ச்சி போட்டிக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்வது, கல்விச் சுற்றுலா, சுற்றுச்சூழல் மேம்பாடு என மாணவர் நலனுக்காக பாடுபட்டார். தொடக்கப் பள்ளியை மேல்நிலைப் பள்ளி வரை தரம் உயர்த்த அடுத்தடுத்து பெரும் முயற்சி எடுத்து சாதித்தார். மாணவர்களுக்கு சிறந்த முறையில் பாடங்களை கற்றுத்தந்தார். இதன் பயனாக ஏராளமான மாணவ, மாணவிகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவி வகிக்கின்றனர். தனது பள்ளி மற்றும் கிருஷ்ணன்கோவில் பள்ளிக்கு தனது சொந்த நிதியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட தலா 5 சென்ட் நிலம் வாங்கி கொடுத்தார்.
வாசகர் கருத்து