மாவட்ட செய்திகள் பிப்ரவரி 03,2023 | 00:00 IST
புதுச்சேரி அடுத்த வில்லியனூரில் இளைஞர் காங் நிர்வாகிகள் பட்ஜெட் நகலை எதித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.. மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பிய கட்சியினர் பட்ஜெட் நகல்களை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். நிர்வாகிகள் கூறுகையில், பாஜ அரசு ஆட்சி பொறுப்பேற்றதும் 2 கோடி பேருக்கு வேலை தருவதாகக் கூறினர். வேலைவாய்ப்பு தொடர்பாக எவ்வித அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. எனவே, பட்ஜெட் நகலை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினோம். தொடர்ந்து தொகுதிவாரியாக இப்போராட்டத்தை நடத்துவோம்" என்றனர்.
வாசகர் கருத்து