மாவட்ட செய்திகள் பிப்ரவரி 03,2023 | 00:00 IST
அகில இந்திய அளவிலான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 11 வது அகில இந்திய பாரா வாலிபால் போட்டி தஞ்சையை அடுத்த தனியார் பல்கலைக்கழகத்தில் 3 நாள் நடக்கிறது. போட்டியை கல்வி அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார், போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா தெலுங்கானா ஆந்திரா, உள்ளிட்ட 22 மாநிலங்களில் இருந்து 30 அணிகளை சேர்ந்த 450 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். தேர்வாகும் வீரர்கள் இந்திய அணிக்காக எகிப்தில் உலக அளவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு விளையாடுவர். நிகழ்ச்சியில்கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் ராமநாதன், தமிழ்நாடு பாரா வாலி சங்க மாநில தலைவர் டாக்டர் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து