மாவட்ட செய்திகள் பிப்ரவரி 03,2023 | 17:30 IST
கூவத்தூர் அருகே கடலூர் சின்னகுப்பம், பெரியகுப்பம், ஆலிகுப்பத்தில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. சில தினங்களாக பத்து மீட்டர் உயர அலைகள் எழும்பி, கடலோரத்தில் பாதிப்புகளை உண்டாக்குகின்றன. சாலைகளில் மின் கம்பங்களும் சேதமடைந்துள்ளன. வீடுகளும் பாதிப்பு அடைவதாக மீனவர்கள் தெரிவித்தனர். மீன்வள துறை அதிகாரிகள் இந்த கிராமங்களுக்கு வந்து கற்கள் கொட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வாசகர் கருத்து