மாவட்ட செய்திகள் பிப்ரவரி 04,2023 | 00:00 IST
திருவள்ளூர் வி.எம். நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். கார்ஸ் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் தொழில் நடத்துகிறார். அம்மா இறந்ததால், அருகில் இருக்கும் மணவாள நகருக்கு குடும்பத்துடன் சென்று இறுதி சடங்கு செய்தார். நேற்று இரவு வி.எம். நகர் வீட்டுக்கு வந்த போது, கிரில் கேட் உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ திறந்துகிடந்தது. அதில் இருந்த 50 சவரன் நகைகை காணவில்லை என அவர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை தொடர்கிறது.
வாசகர் கருத்து