மாவட்ட செய்திகள் பிப்ரவரி 04,2023 | 00:00 IST
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இரவில் பனிப்பொழிவும், பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த இரண்டு நாளாக பகலில் வெயில் தாக்கம் குறைந்து மேகமூட்டத்துடன் லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் இதமான தட்பவெப்ப நிலை நீடித்து வருகிறது. மஞ்சளாறு, சண்முகாநதி, கும்பக்கரை, சோத்துப்பாறை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
வாசகர் கருத்து