மாவட்ட செய்திகள் பிப்ரவரி 04,2023 | 00:00 IST
பழநி கோயிலில் பாஜ தேசிய மகளிரணி தலைவி வானதி சுவாமி தரிசனம் செய்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகம் அவசரமாக நடந்துள்ளதாக கூறுகின்றனர். கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்பவர்கள் தான் கும்பாபிஷேகத்தன்று உறவினர்களையும், குடும்பத்தினரையும் கோயிலுக்கு அழைத்து வந்துள்ளனர். கோவிலுக்கு வரும்போது சுயநலமாகவும், கோவிலுக்கு வெளியே சிறுபான்மையினர் ஓட்டுக்காக இந்து மதத்திற்கு எதிராகவும் பேசுகின்றனர்.
வாசகர் கருத்து